இலங்ளகயில் செங்குத்து தரவுகளின் ஒருங்கிளணப்பு பற்றிய மதிப்பாய்வு
| dc.contributor.author | Manuranga, K.P. | |
| dc.contributor.author | Prasanna, H.M.I. | |
| dc.contributor.author | Lakmal, A.H. | |
| dc.date.accessioned | 2026-10-07T14:37:58Z | |
| dc.date.issued | 2022 | |
| dc.description.abstract | தேசிய புவிசார் கட்டுப்பாட்டு வலையமைப்பு என்பது எந்த நாட்டிலும் அளவையியல் மற்றும் வரைபடமாக்கலிற்கு மிக முக்கியமான கட்டமைப்பாகும். மேலும் இது அளவையியல், பொறியியல், வரைபடமாக்கல் அல்லது நீர்வரைவியல் போன்ற எந்தவொரு அளவையியல் பணிக்கான கட்டமைப்பாக இருக்க வேண்டும். இந்த வலையமைப்பு, நாட்டின் அளவையியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உயர்-வரிசை துல்லியத்துடன் கிடைமட்ட மற்றும் செங்குத்து கூறுகளைக் கொண்டுள்ளது. கிடைமட்ட தரவுகளானது வடிவியல், அதேசமயம் செங்குத்து தரவுகள் பெரும்பாலும் புவிநிலையாற்றல் கொண்டவை. எனவே, செங்குத்துத் தரவு என்பது ஜியோயிட்(புவியுரு) போன்ற சமஅழுத்த மேற்பரப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு குறிப்பிட்ட சமஅழுத்த மேற்பரப்பு, கடல்களின் சராசரி கடல் மட்டத்துடன் (MSL) ஒத்துப்போகிறது. புவிசார் இலக்கியத்தில், செங்குத்து தரவுகளை வரையறுக்க வெவ்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடையாளம் காணலாம். வழக்கமாக, ஸ்பிரிட் மட்டப்படுத்தல், கிராவிமெட்ரிக் மற்றும் டைட் கேஜ் அவதானிப்புகள் உள்ளூர் செங்குத்து தரவுகளை (LVDs) வரையறுக்கப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் குறைந்த தெளிவுத்திறன் கொண்ட ஜியோய்டுகள் (புவியுரு) உலகளாவிய செங்குத்து தரவுகளுக்கு (GVDs) பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, 100 க்கும் மேற்பட்ட உள்ளூர் செங்குத்து தரவுகள்(LVDs) உள்ளன. மேலும் சர்வதேச புவிசாரியல் சங்கத்தின் (IAG) உலகளாவிய புவிசார் அவதானிப்பு அமைப்பின் (GGOS) படி, தற்போதுள்ள உள்ளூர் செங்குத்து தரவுகளுக்கான (LVDs) ஒருங்கிணைந்த செங்குத்து தரவு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் இலங்கையில் செங்குத்து தரவுகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தக்கூடிய பொருத்தமான முறையை அடையாளம் காண்பதாகும். இந்த மதிப்பாய்வு செங்குத்து தரவுகளின் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் முக்கியமாக புவிசார் எல்லை மதிப்பு சிக்கல் (GBVP) அணுகுமுறையின் தலைப்பில் கவனம் செலுத்தியுள்ளது. இது வெவ்வேறு நாடுகளில் அல்லது கண்டம் முழுவதும் செங்குத்து தரவுகளை ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, இலங்கையில் செங்குத்து தரவுகளை ஒன்றிணைப்பதற்கு புவிசார் எல்லை மதிப்பு சிக்கல் (GBVP) அணுகுமுறை மிகவும் பொருத்தமான முறையாகும் என்பதை எங்கள் ஆய்வு வெளிப்படுத்தியது. | |
| dc.identifier.citation | SLAAS Proceedings of the 78th Annual Session 2022 | |
| dc.identifier.uri | http://vidya.nsf.gov.lk:8080/pdfs/vidslaas/2022/309CT.pdf | |
| dc.identifier.uri | https://viduketha.nsf.gov.lk/handle/123456789/21720 | |
| dc.language.iso | tam | |
| dc.publisher | Colombo : Sri Lanka Association for the Advancement of Science , | |
| dc.subject | TECHNOLOGY::Civil engineering and architecture::Surveying | |
| dc.subject | Map | |
| dc.subject | Construction | |
| dc.subject | Engineering | |
| dc.subject | Cartography | |
| dc.subject | Hydrology | |
| dc.subject | Water Science | |
| dc.title | இலங்ளகயில் செங்குத்து தரவுகளின் ஒருங்கிளணப்பு பற்றிய மதிப்பாய்வு | |
| dc.title.alternative | 309/C | |
| dc.type | Article |
